Recent Announcements (2012 - 2013)
பொங்கல் விழா 2020   -  24 Jan 2020
பொங்கல் விழா 2020

குவைத் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

நீஙகள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தநம் குவைத் தமிழ்ச் சங்கத்தின்அடுத்த நிகழ்ச்சி,  கங்கை அமரன் இசைக் குழுவினரின் "இன்னிசை இரவு"   பிரம்மாண்டமான நிகழ்ச்சி வரும் 24/01/2020,  வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி முதல்அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளிஹவாலியில் நடைபெறும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். திரை இசைப் பாடகர்கள் மஹதிசெந்தில்தாஸ் மற்றும் சுஜாதா இவர்களுடன்விஜய் டிவி புகழ் தொகுப்பாளர்நடிகர் மாகாபா கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

 உறுப்பினர் அனுமதிச் சீட்டு / விருந்தினர்  அனுமதிச் சீட்டுநமது சங்க செயற்குழு / நிர்வாகக்குழு உறுப்பினர்களை அணுகி பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம். அரங்கத்தில் அனுமதிச்சீட்டு விற்பனை இல்லை. ஆகவேமுன்கூட்டியே பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம்.

 அனைவரும் வருக ... ஆதரவு தருக...

பொங்கல் விழா 2019   -  25 Jan 2019
பொங்கல் விழா 2019

நீஙகள் ஆவலுடன் எதிர்பார்த்த, நம் குவைத் தமிழ்ச் சங்கத்தின் அடுத்த நிகழ்ச்சி, லக்ஷ்மன் ஸ்ருதி இசைக் குழுவினரின் பிரம்மாண்டமான  "இசை மழை" வரும் 25/01/2019, மாலை 5 மணி முதல், அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளி, ஹவாலியில் நடைபெறும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். திரைத்துறை நடிகைகள், பாடகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.
 
தாயகத்திலிருந்து திரைப்பட நடிகை கஸ்தூரி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இருக்கிறார். மேலும் திரைப்பட பின்னணி பாடகர் க்ரிஷ், NSK ரம்யா, வர்ஷா மற்றும் விஜய் டிவி புகழ் அசார் , டைகர் தங்கதுரை ஆகியோர் கலந்துகொண்டு உங்களை மகிழ்விக்க இருக்கிறார்கள்.
 
அனுமதிச் சீட்டுகளை, நமது சங்க செயற்குழு / நிர்வாகக்குழு உறுப்பினர்களை அணுகி பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம் .
 
அனைவரும் வருக ... ஆதரவு தருக...
நன்றி...

முப்பெரும் விழா   -  26 Jan 2018
முப்பெரும் விழா

குவைத் தமிழ் சங்கத்தின் முப்பெரும் விழா ஜனவரி மாதம் 26 ம் தேதி சிறப்புற நடை பெற்றது. இவ்விழாவினை புதுவருடம், பொங்கல் மற்றும் குடியரசு தின விழாக் கொண்டாட்டமாக வடிவமைத்து இருந்தனர் குவைத் தமிழ் சங்க நிர்வாகத்தினர். பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக, அதன் சிறப்பினை விளக்கும் விதமாக கலை நயத்துடன் உருவாக்கி இருந்தனர். மங்களகரமான மஞ்சளில் மகளிர் குழு அனைவரையும் தமிழ் பாரம்பரிய முறையில் சந்தனம், குங்குமம், பூ கொடுத்து வரவேற்றனர். குழந்தைகள் பாடிய தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதமும், தலைவர் திரு. க.புகழேந்தி வழங்கிய வரவேற்புரையும், பொதுச் செயலாளர் திரு. நா.ராதாகிருஷ்ணன்  இவ்வருட நிகழ்வுகளை தொகுத்து வழங்கவும் முப்பெரும் விழா இனிதே துவங்கியது இன்னிசை மழையுடன்...

இனிய பொன் மாலைப் பொழுதில் குதூகலத்தை குறைவில்லாமல் அள்ளித் தருவதற்காக தாயகத்தில் இருந்து வந்த 14 இசைக்குழுவினரையும் மற்றும் 7 திரை உலக பிரபலங்களையும் பொதுச் செயலாளர் திரு. நா.ராதாகிருஷ்ணன் அறிமுகம் செய்ய, இன்னிசை நிகழ்ச்சி இனிதே ஆரம்பமானது, குவைத் தமிழ் சங்கம் இசை மழையில் நனைய ஆரம்பித்தது. “உதய ராகம்” UK.முரளியின் இசைக்குழுவினரோடு இணைந்து பின்னணி பாடகர்கள் தீபக். ஸ்ரீமதுமிதா மற்றும் மகாலிங்கம் தங்களின் இனிய குரலினால் அரங்கத்தை அதிர வைத்தனர்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நடிகரும் திரைப்பட இயக்குனருமான திரு. திருமுருகன் கலந்து கொண்டார். துணைத் தலைவர் கணேஷ்குமார்  இயக்குனரை அறிமுகப்படுத்தினார். திரு. திருமுருகன் சிறப்புரையாற்றியதோடு மட்டுமல்லாமல் தனது அடுத்த படைப்பான “கல்யாண வீடு” தொலைக்காட்சி சீரியலின் சிலபகுதிகளை குவைத் தமிழ் மக்களுக்காக முதன் முதலாக அரங்கேற்றினார்.

குதூகலத்தின் அடுத்த பகுதியாக ஆதித்யா TV புகழ் அகல்யாவும் செந்திலும் இணைந்து சிரித்துக் குலுங்க வைத்தனர்; குழந்தைகளை தம் வசப்படுத்தினர்.

இப்படி மாலை 5 மணிக்குத் துவங்கிய நிகழ்ச்சி அட்டகாசமான பாடல்களாலும் ஆரவாரமான நகைச்சுவையினாலும் களை கட்டியது, களைப்பின்றி களிப்புற அமர்ந்திருந்தனர் அனைவரும்.

எந்த ஒரு சிறப்பு பொது நிகழ்வும் சாத்தியமில்லை நன்கொடையாளார்களின் தயவின்றி. அந்த நல்லிதயங்களைக் கௌரவிப்பதே நாம் அவர்களுக்குச் செய்யும் மரியாதை. ஆம்; குவைத் தமிழ் சங்கமும் அதற்கு விதி விலக்கல்ல ஒவ்வொருவரையும் அழைத்து சால்வை போர்த்தி நினைவுப் பேழையும் கொடுத்து சிறப்பாக கௌரவித்தனர். சிறப்புற நடந்த முப்பெரும் விழாவின் நன்றி உரை நவின்றார் பொருளாளர் பாண்டியன்.

அடுக்கடுக்கான நிகழ்ச்சிகளால் அசர வைத்ததோடு மட்டுமல்லாமல் குலுக்கல் முறையில் உறுப்பினர்களுக்கு பலப்பல பரிசுகளும், சங்கீதா மறறும் மீக்கோசம் உணவகங்களில் இருந்து சுவையான இரவு விருந்தும் கொடுத்து முப்பெரும் விழா இனிதே நிறைவு பெற்றது.

குழந்தைகள் தின விழா   -  24 Nov 2017
குழந்தைகள் தின விழா

குவைத் தமிழ் சங்கம் குழந்தைகள் தின சிறப்பு விழாவை வெள்ளிக்கிழமை , 24 ம் தேதி நவம்பர் மாதம் சிறப்புற நடத்தியது. இவ்விழா ஸ்மார்ட் இந்தியன் பள்ளி அரங்கத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக முனைவர். G. பாஸ்கரன் , துணை வேந்தர் , தமிழ் பல்கலைக்கழகம் தஞ்சாவூர், கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நமது பாரம்பரிய முறையில் குத்துவிளக்கு ஏற்றி , தமிழ் தாய் வாழ்த்து மற்றும் இந்திய & குவைத் தேசிய கீதம் இசைத்து விழாவை தொடங்கி வைத்தனர்.

300 க்கும் மேற்பட்ட குழந்தைகள் விழாவில் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றனர். அரங்கமே விதம் விதமான வேடங்களுடன்  சின்னஞ் சிறார்களும், உலகப் பொதுமறையான திருக்குறளை ஒப்புவித்தலும், மனதை மயக்கும் பாடல்களும், இசையும், சிலிர்க்கவைக்கும் நடனங்களும், அறிவுப்பூர்வமான வினாடி வினாவும் , சிந்திக்க வைக்கும் நாடகங்களும், நகைச்சுவையுடன் கூடிய  DubSmash- ம், முத்தான பேச்சுக்களும் கொண்டு குழந்தைகள் அரங்கத்தை அதிர வைத்தனர். குழந்தைகளுக்கான இந்த நிகழ்வு முற்றிலும் குழந்தைகளாலேயே நடத்தப்பெற்றது. அனைத்து நிகழ்ச்சிகளையும் குழந்தைகளே அழகிய தமிழில் தொகுத்து வழங்கினர்.

குவைத் தமிழ் சங்க உறுப்பினர்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அரங்கத்தில் நடந்த தொடர் நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். குழந்தைகள் வண்ண வண்ண உடைகளுடனும் , விதம் விதமான அலங்காரங்களுடனும் வியக்க வைக்கும் திறமைகளைக் கண்டு இமை மூடாமல் ரசித்தனர் குழுமி இருந்த அனைவரும்

இந்த விழாவின் ஒரு பகுதியாக திரு கோதண்டராமன் முதல்வர் வேலம்மாள் பள்ளி, சென்னை, பங்கு கொண்டு வேலம்மாள் பள்ளியைப் பற்றி சிறப்புரை ஆற்றினார்.

விழாவில் சிறப்பு விருந்தினர் திரு G.பாஸ்கரன் சிறப்புரையும் திரு. க.  புகழேந்திரன் தலைமை உரையும் , திரு. நா .ராதாகிருஷ்ணன் செயலாளர் வரவேற்புரையும் திரு. ரா ஆனந்தராஜ் நன்றியுரையும் அளித்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியாக பங்கு பெற்ற அனைவருக்கும் பரிசுக்கு கோப்பையும் சான்றிதழ்களும் வழங்கப்படடன. கடந்த ஆண்டு 2016 -17 ல் நடந்த பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினர்.

கண்களுக்கு விருந்தளித்த குழந்தைகளுக்கும் மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் சங்கீதா உணவகத்தில் இருந்து அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது.

இறுதியாக சங்க நிகழ்வுகள் செவ்வனே நடைபெற பெரிதும் உதவிய நன்கொடையாளர்களுக்கும், குவைத் தமிழ் சங்க உறுப்பினர்களின் தொடர்ந்த ஆதரவுக்கும் நன்றி தெரிவித்து விழா இனிதே நிறைவடைந்தது.

கோடையில் ஒரு இசைச் சாரல் விழா   -  19 May 2017
கோடையில் ஒரு இசைச் சாரல் விழா

கோடையில் ஒரு இசைச் சாரல் விழா

குவைத் மண்ணில் கோடை துவங்கி விட்டது; உங்களை மகிழ்விக்க  குவைத் தமிழ்ச் சங்கத்தின் இசைச் சாரல் விழா இதோ வருகிறது. ஆம் நமது 2017-18 ஆம் ஆண்டின் இரண்டாவது நிகழ்வாக “கோடையில் ஒரு இசைச் சாரல் விழா”  வருகின்ற 19ஆம் தேதி வெள்ளிகிழமை மாலை 5:00 மணியளவில் (19.05.2017) அப்பாஸியா கம்மியூனிட்டி அரங்கில் நடைபெற இருக்கிறது.

நிகழ்ச்சி விபரங்கள்:

நேரம்: மாலை 5:00 முதல் இரவு 10:00 மணி வரை 

இடம்: அப்பாஸியா கம்மியூனிட்டி அரங்கம் (Abbasiya Community Hall)

நிகழ்வு நடைபெறும் அப்பாஸியா கம்மியூனிட்டி அரங்கிற்கு செல்லும் வரைபடம் (google location map) விவரத்திற்கு கீழ்க்கண்ட இணைப்பை (link) அழுத்தவும்.

https://goo.gl/maps/Qoa9bDC9MoP2  

சித்திரைத் தென்றல்   -  21 Apr 2017
சித்திரைத் தென்றல்

இந்த ஆண்டின் நிறைவு விழாவாக வருகின்ற சித்திரைமாதம் (21.04.2017) 8ஆம் தேதி வெள்ளிக் கிழமை மாலை 5.00 மணி முதல் “சித்திரைத்தென்றல்” எனும் இன்னிசை நிகழ்ச்சி பல சுவையான  நிகழ்ச்சிகளுடன்  மிகச் சிறப்பாகநடைபெற உள்ளது.

 
நிகழ்ச்சிகள் விபரம்:
 
நேரம் : மாலை 5.00 மணிமுதல் இரவு 9.30 மணி வரை.
 
இடம் : பின்ட்டாஸ் திருமண அரங்கம் (Fintas Wedding Hall, Fintas)
 
நிகழ்ச்சி தொகுப்பாளர்சன் டிவியின் நீங்கள் கேட்ட பாடல்” புகழ் திருவிஜயசாரதி நடத்தும் தம்பதியருக்கான போட்டிகளும் நடைபெறும்
 
சிறப்பு இசைவிருந்துவீணைஇசைவித்வான் "கலைமாமணிதிரு. இராஜேஷ்வைத்யா மற்றும் குழுவினர்கள்.  
 
 நூல் வெளியீடு : சங்க மகளிர் படைப்புக்கள் அடங்கிய   "உணவே மருந்து "   என்ற  சமையல் குறிப்பு புத்தகம் வெளியிடப்பட உள்ளது.  
 
மேலும்  2016-2017க்கான ஆண்டு அறிக்கை வெளியீடு மற்றும்  2017-2018 வருடத்திற்க்கான செயற்குழு உறுப்பினர்  தேர்தலும்   நடைபெறும் என்பதைதெரிவித்துக்கொள்கிறோம்

“மகளிர் தின விழா”   -   7 Apr 2017
“மகளிர் தின விழா”

நமது குவைத் தமிழ்ச்சங்கத்தின் “மகளிர் தின விழா” வரும்  07.04.2017 தேதி வெள்ளிக் கிழமை காலையும், மாலையும் நமது சங்க மகளிர் பங்குபெறும் பல சுவையான போட்டிகளுடன் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.

"பொங்கல் திருவிழா - மாபெரும் இயலிசை விருந்து"   -  20 Jan 2017

தங்களின் மேலான ஆதரவுடன்  வரும் பொங்கல்விழா 2017ம் ஆண்டு, ஜனவரி மாதம் 20ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை  5.00 க்கு, அமெரிக்கன் இன்டர்நேஷனல் ஸ்கூல்ஹவல்லி                  யில்  நடைபெற உள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 

 

தாயகத்தில் இருந்து, . சாதகப்பறவைகள்இசை  குழுவினர்களுடன் ஏர்டெல் புகழ் திரைப்படபின்னணிப்பாடகர்ஆனந்த் அரவிந்த் தக்க்ஷன்  திரைப்பட பின்னணிப் பாடகி அனிதா வெங்கட் மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் சரத் & தீனா ஆகியோர்கள் நம்மை மகிழ்விக்க உள்ளார்கள். 

திரைப்படநடிகை மீனா” மற்றும் தொலைக்காட்சி புகழ் "DD" என்றழைக்கப்படும் திவ்யதர்ஷினி திரைப்பட இசை இயக்குநர் / பாடகர் பரத்வாஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினார்களாக  பங்கேற்க உள்ளனர்.

Pongal Vizha artists arrived   -  20 Jan 2017
Pongal Vizha artists arrived

Pongal Vizha artists arrived

"குழந்தைகள் தின விழா"   -  18 Nov 2016

வரும்  நவம்பர் மாதம் 18 ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு "குழந்தைகள் தின விழாசால்மியா இந்தியன் கம்யூனிட்டி பள்ளி (ICSK-Senior, Salmiya) அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது  என்பதை  மீண்டும்  தெரிவித்து கொள்கிறோம்.